Popular Posts

Friday, August 15, 2025

Experiment -2. பொதுவெளியில் விவாதம்

பொதுவெளியில் விவாதம்https://activismforfastjustice.blogspot.com/

                                         ( பதிவு தபால் )

விடுநர்:

ஹாஜி.S.முஹம்மது,

S/O. சேக் முஹம்மது 

பங்களாபட்டி ரோடு  வடகரை. பெரியகுளம்.

தேனி மாவட்டம். 9345562420

 பெறுநர் :

திரு. L. தங்கராஜ் அவர்கள். 

S/O. லட்சுமணன் சேர்வை Ex. ஊராட்சித் தலைவர், பூம்பாறை கிராமம்,  கொடைக்கானல்.  கைபேசி: 8098337793

 ஐயா,

பூம்பாறை கிராமம் சர்வே எண் 331/1 C, ( 330/5 ) எனக்கு சொந்தமான இடத்தில்,  தாங்களும் தங்களை சார்ந்தவர்களும்    என்னுடைய அனுமதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதும், என்னுடைய இடத்தில் இருக்கும் மின்சார கம்பத்தில் ( சிசிடிவி ) கேமராவை பொருத்தி என்னுடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதும்    சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 

            

 நான் பலமுறை தங்களிடமும் தங்களைச் சார்ந்தோரிடமும் நேரில்  எச்சரித்தும், எனது வார்த்தைகளை உதாசீனப்படுத்துவது, தங்களின் ஆணவ போக்கை காட்டுகிறது. தங்களின் இந்த நடவடிக்கை 74 வயது  மூத்த குடியான என்னை மிகுந்த மன உழைச்சலுக்கு ஆட்படுத்துகிறது. 

            

 25 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறை கிராமம், புழகவை  பகுதியில் எங்கள் கூட்டுக் குடும்ப பட்டா நிலங்களில் சுமார் 15 ஏக்கர் நிலத்தை நான்கு நபர்களுக்கு விற்றதில்,  எனக்கும் என்னிடம் நிலம் வாங்கிய  நபர்கள் மற்றும் அருகிலுள்ள சிறிய குரு  விவசாயிகள் மத்தியில் நடைபாதை சம்பந்தமாக  கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில வழக்குகள் உற்பத்தியாகி, இறுதியாக கொடைக்கானல் கோட்டாட்சியர் நடுவர் மன்றம்   தீர விசாரித்து ஒரு தீர்ப்பு ( நா. க. என். 1787 / 99 / ஆ 5. தேதி : 24 .11. 1999 ) வழங்கியது என்றும், அதேபோல் கடந்த ஆண்டு சில சுயநல வாதிகளால் பாதை சம்பந்தமாக சில பிரச்சனைகள் ஏற்பட,  நான் மதுரை உயர்நீதி மன்றத்தில் ஒரு  ரிட் மனு ( WP.( W.D) 12829 தேதி : 18 .06. 2024 )தாக்கல் செய்து அதன் அடிப்படையில்  சென்ற   27. 09.2024 ம் தேதி    ( நா. க. என். 2166 / 2024 . 46 / ஆ 1.)  கொடைக்கானல்  வட்டாட்சியர்,  கோட்டாட்சியர் நடுவர் மன்ற  தீர்ப்பை உர்ஜிதம் செய்துள்ளார் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மண்ணின் மைந்தன் என்ற முறையில், எதிர்கால சந்ததிகள் நலன் கருதி , மேற்கண்ட  பாதையை  அரசுக்கு எழுதிக் கொடுப்பதன் மூலமாக பொதுப்பாதை ஆக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கோரிக்கை.  

எனவே, 

 தங்கள் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை  தாங்களே அமைக்க வேண்டும் என்றும் அந்தக் குழு  பொதுவெளியில் விவாதம்  மேற்கொண்டு அதன் அடிப்படையில் நாம் அனைவரும் சேர்ந்து பாதைக்காண நிலத்தை அரசுக்கு எழுதிக் கொடுப்பதன் மூலம் மேலே கண்ட பாதையை பொதுப் பாதையாக்குவதன் மூலம் பாதை பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை அடைய ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவன்.

 ஹாஜி. எஸ் .  முஹம்மது. 16 / 08 / 2025.

நகல் :

1. திரு. வட்டார வளர்ச்சி அதிகாரி (BDO) அவர்கள், வட்டார வளர்ச்சிஅலுவலகம், அண்ணா நகர்,  கொடைக்கானல்.

2. திரு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம்  கொடைக்கானல்.

பின்குறிப்பு: நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேலே கண்ட பாதை சம்பந்தமாக அரங்கேறும் அனைத்து நிகழ்வுகளையும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.










 

Friday, June 6, 2025

Participant -1 Participatory Action Research.

Participatory Action Research. 

Participant No.1

 " ஹக்கை"   தேடி அலைந்த நடுத்தர வயது மனிதன். துணையைப் பிரிந்து, பல கூடாரங்களில் தங்கி  வெளிச்சத்தை தேடி ஈமானிய மண்டபத்திற்குள் பிரவேசித்த இவர்,  குர்ஆன், ஹதீஸில் மூழ்கி முத்து குளித்து மனித இனத்தின் வரலாற்றை பிசகரா தெரிந்து இறுதி நாளுக்கு நேரத்தைக் குறித்து பேசுகிறார்.

23/04/25 தேதிய அவர் வருகை எனக்கு என்ன கொடுத்தது?

1.  நன்மை தீமை எதைக் கொண்டு பிரித்து அறிவது.   அதன் அளவுகோல்  ஷரியத். இருவரும் அறிவோம். 

2.  சரித்திரங்கள் என்னை விட பத்து மடங்கு அதிகமாக அறிந்துள்ளார். 

3.  " ஹக்கை" தேடுவதில் பாதைகள் வேறாக இருந்தாலும் எனது பேணுதல் குறைவை அவர் எடுத்துக் காட்டியது  எனது தவறை உணர நேர்ந்தது அவர் கண்டுபிடித்த கீழ்க்கண்ட ஹதீஸ் 

 " எல்லோரிடமிருந்தும்   தூரமாக தனித்திருத்தல்"; அதுவே தற்சார்பு வாழ்க்கை. என்பதை எனக்கு உணர்த்தியது.

 ஹதீஸ்:ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார். 

 மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 

 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)' என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்' என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்' என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்' என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)' என்று பதிலளித்தார்கள். 

 (ஸஹீஹுல் புகாரி: 3606. , அத்தியாயம்: 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்)

 4. தேனி மாவட்டத்தில் கிலாபத்.. பங்கேற்க்க இருக்கும் 40 நபர்களில் இவரது எண்: 1.

 முஹம்மத்..27/04/2025. 

 2/5/25.. இவர் அனு செய்தி.

பணம் சேர்ப்பதற்கும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை.. இரண்டும் வேறு.. வாழ்வது என்பது வேறு பணக்காரராக இருப்பது என்பது வேறு.. உங்கள் வாழ்க்கையில் பணத்தை நோக்கி நகராதீர்கள் பணத்தை நோக்கி ஓடாதீர்கள்.. தன்னுடைய உடல் நலம் மனநலம் தன்னுடைய குடும்ப நலன் தன்னுடைய சமுதாய நலன் தான் சார்ந்த அருகில் உள்ள மக்களின் நலன் இவை சார்ந்த நலன் பற்றிய அறிவு.. ஆம் அறிவு சிந்தனை நோக்கி நகருங்கள்.. அறிவையும் திறனையும் தேடும் போது பணம் தானாக வரும்.. வெறு மணே பணத்தை மட்டுமே நோக்கி மட்டும் ஓடும் போது ஒரு நாள் மொத்தமாக கீழே விழுவீர்கள்... பணத்தை முதன்மைப் படுத்த வேண்டாம் அறிவை முதன்மை படுத்துங்கள்.. அறிவு என்பது உங்கள்  உங்களை சார்ந்த வர்கள் உடல் மனநலத்தை பற்றி தெரிந்து கொள்வது...

2/6/25.

கீழே இருந்த குர்ஆன் வசனமும் ஹதீஸ் அஜிஸ் அவர்கள் அனுப்பியது. 

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலமாகிய 1500 ஆண்டுகள் முடியும் தருணத்தில் இருக்கிறோம். தஜ்ஜாலின் சோதனை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. யுக முடிவு வரப்போகிறது என அனுப்பி உள்ளார். 

( அவர் யுக முடிவை பற்றி பேசுகிறார். ஆனால்   நான் மரணத்திற்காக வாழ்கிறேன். இறைவனை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்   முகமது 3/6/25.)

சூரா அஸ்ர் ன் முன்னறிவிப்பு :

நாம் செய்ய வேண்டிய பணிகள் :

அஸ்ர் - இதை காலம் என மொழியாக்கம் செய்திருப்பார்கள்.

ஆனால் மாலை பொழுதையே இது குறிக்கும். அதாவது அஸ்ர் நேரம்.

சூராவின் வசனங்கள் :

1). அஸ்ர் நேரத்தின் மீது சத்தியமாக !

பொருள் : 

உலகின் காலம் உதித்து, நீண்ட காலம் இயங்கி, இப்போது மறைந்து முடிய போகிறது.

இப்போது நீங்கள் இருப்பது அதன் மாலை பொழுதில்.

அம்மாலை பொழுதின் மீது சத்தியமாக.

2). நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

பொருள் :

உலகம் அழிவு நாளிற்கான அடையாளங்கள் நெருங்கிவிட்டது.

ஆயினும் மனிதன் சுவனத்திற்கு செல்லும் காரியங்களை செய்யாமல்,

இன்னும் அதிக காலம் இருப்பதாக எண்ணி அலட்சியமாக இருக்கிறான்.

3). அந்நாளில் இறைவனை நம்ப வேண்டிய முறைப்படி நம்பி, 

அவன் கூறிய நற்காரியங்களை செய்து, காலத்திற்கு தேவையான சத்திய செய்திகளை ஒருவொருக்கொருவர் உபதேசித்து கொண்டும், 

அக்காலத்தில் ஏற்படும் சோதனைகளில் உறுதியாக இருக்கும் படியும் கூறி கொண்டும் இருப்பார்களே அவர்கள் மட்டுமே சரியான வழியில் இருப்பார்கள்.

பொருள் : 

இறைவனை நம்புவது என்பது அவன் இறைதூதர்கள் வழியாக இறைவேதங்களில் கூறிய செய்திகளை நம்பி அதை உண்மைபடுத்த வேண்டும்.

இதில் உலக இறுதியின் முன்னறிவிப்பும் மறுமையின் முன்னறிவிப்பும் அடங்கும்.

அதில் கூறப்பட்ட நற்காரியங்கள் எதுவென ஆய்வு செய்து அவைகளை முழு ஈடுபாட்டுடன் செய்வதும்,

பல அசத்தியங்களுக்கு மத்தியில் சத்தியத்தை அறிந்து அதை மற்றவர்கள் அறிய உபதேசித்து பிரச்சாரம் செய்தும்,

அத்தகைய இறுதி நாளின் சிரம சூழ்நிலைகளில் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் கூறிய பணியை செய்து,

முடிந்து வரும் மாலை அஸ்ர் நேரமான இந்த உலகின் இறுதி நேரத்தை சுவனம் செல்லதக்கதாய் மாற்றி கொள்பவர்கள் தான் காலத்தை வீணடிக்காமல் பயன்படுத்தி வெற்றி பெற்ற கூட்டத்தினர் என அல்லாஹ் கூறுகிறான்


🕔🕔🕔🕔🕔🕔🕔🕔🕔🕔🕔🕔🕔🕔


இப்போது புகாரியில் உள்ள 2268, 2269 ஹதீஸிற்கு வருவோம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களுக்கும் (முஸ்லீம்களுக்கும்), யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உவமை,

ஒருவரால் கூலிக்கு நியமிக்கப்பட்ட மூன்று கூட்டத்தினர் ஆவர் ! 

ஒரு கீராத் கூலிக்கு அதிகாலையில் (ஃபஜ்ரில்) இருந்து நடுப்பகல் (லுஹர்) நேரம் வரை எனக்காக வேலை செய்பவர் யார் ? என்று அம்மனிதர் கேட்டார். 

அதற்கு முதல் கூட்டத்தினரான யூதர்கள் ஒப்பு கொண்டு ஒரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்.

பிறகு, 

நடுபகல் (லுஹர்) நேரத்தில் இருந்து மாலை நேரமான அஸ்ர் நேரம் வரை ஒரு கீராத் கூலிக்கு வேலை செய்பவர்கள் யார் ? என்று அம்மனிதர் கேட்டார்.

அதற்கு கிறிஸ்தவர்கள் ஒப்பு கொண்டு அதே ஒரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்.

பிறகு மீண்டும் அம்மனிதர் மாலை நேரமான அஸ்ர் ல் இருந்து சூரியன் மறையும் அந்நாளின் முடிவு நேரமான மஃரிப் வரை வேலை செய்பவர்கள் யார் ? என கேட்டார்.

அதற்கு நீங்கள் (முஸ்லீம்கள்) வேலை செய்தீர்கள்.

உங்களுக்கு இரண்டு கீராத் கூலி கொடுக்கப்பட்டது.

உடனே முன்பு (நீண்ட நேரம்) வேலை செய்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் எங்களுக்கு ஒரு கீராத் கூலியும்,

அவர்களுக்கு இரண்டு கீராத் கூலியுமா என கோப பட்டார்கள்.

அதற்கு தோட்டத்தின் உரிமையாளர் கூறினார்.

உங்களுக்கு பேசிய கூலியில் எதாவது குறைத்தேனா ?

யூத கிறிஸ்தவர்கள், இல்லை என்றார்கள்.

நான் மாலை நேரமான அஸ்ர் ல் இருந்து சூரியன் மறையும் நேரம் வரை, 

வேலை செய்த இவர்களுக்கு இரண்டு கீராத் கூலி கொடுப்பது என் அருட்கொடையாகும். 

அது என் தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார்.

குறிப்பு : ஒரு கீராத் என்பது உஹத் மலையளவு உள்ள தங்கம் ஆகும்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரலி.


🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖


நபி ஸல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காலம் ஒன்னரை நாள்.

அதாவது 1500 ஆண்டுகள்.

இந்த சூரா நபி ஸல் மற்றும் ஸஹாபிகள் வாழ்ந்த காலத்தில்இறங்கியது.

அப்போதே அஸ்ர் நேரம் என்றால் இப்போது நாம் வாழும் இக்காலம் சூரியன் மறையும் முன்னர் உள்ள மாலை பொழுதை குறிக்கிறது.

ஆதம் நபி காலம், சூரியன் உதயமான பொழுது.

நபி ஸல் அவர்களின் வாழ்வு வரை அஸர் பொழுது.

இப்போது தஜ்ஜால் வெளிப்படும் நமது காலம் சூரியன் மறையும் முன்னர் உள்ள சொற்ப காலம் ஆகும்.

கடந்து வந்த 1500 ஆண்டுகளில் இப்போது ஹிஜ்ரி கணக்கின் படி 1446 கடந்து விட்டது.

எஞ்சியிருப்பது சூரியன் மறைய உள்ள இந்த கொஞ்ச காலம் தான்.

அதாவது தஜ்ஜாலின் காலம்.

தொடங்கிய நாள் முடிய போகிறது.

உலகம் அழிய போகிறது.

உலகம் அழிவுக்கு நெருங்கி வருகிறது.இது நிறைவேற வேண்டிய வாக்குறுதி ஆகும்.

ஆக, 

இந்த சூராவில் அல்லாஹ் கூறியபடி

இறுதி காலத்தில் செய்ய வேண்டிய நற்காரியங்களை செய்து இழந்து வரும் இம்மையை, 

மறுமைக்கு பயனுள்ளதாக மாற்றி கொள்பவர்களே காலத்தின் சோதனையில் இருந்து வெற்றிபெற்று சுவனம் செல்பவர்கள்.

இந்த சோதனையில் எல்லாம் பெரிய சோதனை தஜ்ஜாலின் சோதனை தான்.

ஸஹாபிகள் ஒருவரை சந்தித்தால் இந்த சூராவை ஓதாமல் பிரிய மாட்டார்கள்.

இந்த ஒரு சூராவை மக்கள் ஆழ புரிந்து கொண்டால் இது ஒன்றே அவர்கள் வெற்றியடைய போதுமானது என்று இமாம் ஷாஃபி ரஹ் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

காலம் நமக்கு அதிகமாக இல்லை.