Popular Posts

Sunday, December 15, 2024

நான் யார் ??? Who am I ?

15/12/2024. ( தொடர்-1)

அன்பு  சகோதரருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

1.   இறை இல்லங்களில் இறையாட்சி  என்கிற இந்த தலைப்பு வேற ஒரு நோக்கத்திற்காக  வைக்கப்பட்டது.

இது சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.அடுத்து நான் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பகிர்வேன்.

2. நான் யார்? ( Who am I ?) என்ற கேள்விக்காண  பதிலை "தன்னை அறிதல்"  என்ற இந்த ஞான விளக்க நூலில் தேட முயற்சி செய்தேன். மேற்கண்ட நூலை ஒரு முறை அல்ல பலமுறை படித்து, தொடர்ந்து படித்தும் வருகிறேன். நோக்கம் என்னவென்றால் இதில் கூறப்பட்டுள்ள மையக்கருவை உள்வாங்க வேண்டும். சந்தேகமில்லாமல் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது என் முன்னால் இருக்கும் ஒரே ஒரு கேள்வி அதில் கூறப்பட்ட கருத்தை நூற்றுக்கு நூறு நான்  சரியாகப் புரிந்துள்ளேனா? என்பது மட்டுமே.

நான் என்ன புரிந்துள்ளேன் என்பதை தங்களிடம் கூறும் பொழுது, நான் சரியாகப் புரிந்துள்ளேனா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்.

3. 'தன்னை அறிதல்' என்ற இந்த புத்தகத்தை முழுமையாக புரிவதற்கு இந்த இரண்டாவது புத்தகம் "தரிக்கத்தின் அவசியம்" ஒரு முன்னுரையை போல எனக்கு தோன்றுவதால் அந்த தரிக்கத்தின் அவசியம் என்ற 40 பக்கம் உள்ள இந்த சிறிய நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.

4. 'தரிக்கத்தின் அவசியம்'! என்ற இந்த சிறிய புத்தகம் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக கூறுகிறது. அது என்னவென்றால் குர்ஆன்ஷரீபில் மூன்று  பிரிவுகள் உள்ளது. 

1. ஏவல் விளக்கல்.

 2 சரித்திரங்கள் 

3. தௌஹீத்

5.  முதல் இரண்டு விஷயங்கள் அதாவது ஏவல் விலக்கல் என்பது "சரியத்" எனும் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெளிவாக  பிசகர இமாம்கள் கூறிவிட்டார்கள்.

இரண்டாவது விஷயம் இந்த உலகம் தோன்றியதில் இருந்து நடந்த சரித்திர நிகழ்வுகள் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது விஷயம் இறைவனை அடைவது. தவ்ஹீத்.

6. இந்த மூன்றாவது விஷயம் இறைவனை அடைவது. தவ்ஹீத். என்பது ஒரு காமிலான  முர்ஷிது..( குரு) மூலமாக மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

7. ஆனால், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மற்ற நபிமார்களுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.  மற்ற நபிமார்கள் இறைவனின் தரிசனத்தை  தேடினார்கள்.  ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீங்கள் இறைவனை ஒவ்வொரு வஸ்துவிலும் தேடுங்கள் என்பதாகவும், இறைவனுடைய படைப்புகளை ஆராயுங்கள் அவனுடைய வல்லமை புரியும்"  

8. இந்தப் புத்தகத்தில் 12 ம் பக்கத்தில் "ஜனங்கள் எல்லாம் நன்மையைக் கொண்டு இறை நெருக்கத்தை பெற்றால் நீங்கள் "இல்மை' கொண்டு இறை நேருக்கத்தை பெருவீராக" என்ற ஒரு ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

9. இந்த ஹதீஸ்ன் அடிப்படையில் இந்த புத்தகங்களில் இருக்கக் கூடிய விஷயங்களை உள்வாங்குவதன் மூலமாக இறைவனை அடைய முடியுமா ? என்பதே எனது முயற்சி.

10. நான்  தற்போது எங்கு என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை 

கீழ் கண்ட  இணைப்பில் தாங்கள் புரிந்து கொள்ள முடியும்.


இணைப்பு 

எனது ரகசிய  தோட்டம் :

 ( My Secret Garden Concept ) 

என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,வயது 73.கொடைக்கானல் தாலுகா, பூம்பாரை கிராமமே நான் பிறந்து வளர்ந்த புன்னிய பூமி.  

அசையா சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் எனது தொழில். "இயற்கை வைத்தியம்" எனக்கு மிகவும் பிடித்த துறை.இந்திய மாற்று மருத்து கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட சிகிச்சையாளர்.( Therapist )

1)  எனது ரகசிய தோட்டம் சுமார் 20, 000.ச. அடி பரப்பளவு உள்ள மனையிள் சுமார்  ரூ.5,00,000/- முதலீட்டில் உருவாகும். 

( Single beded House 10 Nos., Meditation Cum meeting Hall & Treatment Center and Office Room. )

2)   இதில்  வனிக நோக்கத்தையும் தான்டி  உன்னதமான உறவுகளை கட்டமைக்கும் முயற்சி. 

3.)  சுதந்திரமானது.  தன்னை தானே நிர்வகிக்கும் திரன் படைத்தது.

4.) இறைவனின் படைப்புகள் அனைத்தும் தனிதன்மை வாய்தவை. இந்த திட்டத்தில் என்னுடன் பயனிக்கவிருக்கும்   100.நபர்களும் தனிதன்மை வாய்தவர்கள். சுருங்ககூறின் எனக்கு நல்வழிகாட்டும் ஆசான்கள். 

5.  இது ஒரு உள் முக பயனம்.  தனியாக அல்ல..முகம் தெரிந்த,  முகம் தெரியாத ( Social Media friends) 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் இனைந்து மூண்று அடிப்படை கேள்விகளை மையமாக கொண்டு  நடத்தவிருக்கும் (:Participatory Action Research ) ஆராய்ச்சி.

 ~   நான் யார்?  

~    என் உடல் எந்த ரகத்தை சார்ந்தது?     

  ~  எப்போது  எந்த உணவை சாப்பிட்டால்  ஆரோக்கியமாக வாழலாம்?   இதுவே ஆராய்ச்சியின் மைய கரு.

எப்படி  பங்கேற்பது ? நிபந்தனைகள் :

 நாள் ஒன்றிர்க்கு ரூ.10/ வீதம்  வருடம் ரூ.3650/-  உறுப்பினர் கட்டனம்.  

அருகில் இருக்கும் குடில்களில் தங்கி தங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து தெம்பூட்டுவர்.

பதினைந்து  தினங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக திட்டம்-1 க்கு ரூ  150/- கிழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாக பணம் செலுத்த அனுமதி இல்லை. தொடர்ந்து  6 வாரங்கள் பணம் செலுத்த தவறிய அங்கத்தினர் தானாகவே வெளியறிவிட்டதாக அர்த்தம்.

 மேற்கண்ட நிபந்தனைகளை மனப்பூர்வமாக ஏற்றுகொண்ட 100 நபர்கள் மட்டுமே உறுப்பினர் ஆக முடியும்.

ஹாஜி.S. முஹம்மத். கொடைக்கானல். 9345562420

.

Sunday, August 11, 2024

எதிலும் நேர்மை, எதிலும் உண்மையாக வாழுங்கள்.


எதிலும் நேர்மை, எதிலும் உண்மையாக வாழுங்கள்.


எதையும் ஒருவன் புரிந்து கொள்ளாமல் செய்கின்ற காரியங்கள்...பின்பு அவனுக்கே வினையாக வரும்போது. ஏற்படக்கூடிய அவஸ்தை. 


ஊமைப் பெண் ஒன்று கனவு கண்டால் அதை எப்படி வெளியே சொல்வாள் அது போலே ஆகிவிடும் இவர்கள் வாழ்க்கை. 


எதிலும் நேர்மை, எதிலும் உண்மையாக வாழுங்கள். 


இன்று சிறப்பு இல்லை என்றாலும், என்றுமே சிறப்பானது உன் வாழ்க்கை...


🙏🏾இனிய காலை வணக்கம்🙏🏾 

இன்று கிடைத்த செய்தி 12/8/2024.

Monday, July 22, 2024

இன்று google ஜெமினியிடம் நான் கேட்ட கேள்வியும் பதிலும் ...

கூகுள் ஜெமினியிடம் இன்று நான்  கேட்ட கேள்வி 
எனக்கு 73 வயதாகிறது, எனக்கு சர்க்கரை இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. எனது நல்ல ஆரோக்கியத்திற்கான உணவு அட்டவணையை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.
எனது கேள்விக்கு கூகுள் ஜெமினி கொடுத்த பதில் .
உங்கள் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சுகாதார வரலாற்றைக் கருத்தில் கொள்ளக்கூடிய ஒரு பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணரால் சிறப்பாகச் செய்யப்படும் என்பதால், குறிப்பிட்ட உணவுத் திட்டத்தை என்னால் வழங்க முடியாது. இருப்பினும், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான கவலைகளுடன் 70 இல் ஆரோக்கியமான உணவு அட்டவணைக்கு சில பொதுவான வழிகாட்டுதல்களை என்னால் வழங்க முடியும்:

இந்த உணவுகளில் கவனம் செலுத்துங்கள்:

பழங்கள் மற்றும் காய்கறிகள்: நாள் முழுவதும் பல்வேறு வண்ணங்களை நோக்கமாகக் கொள்ளுங்கள். அவை வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளன .
முழு தானியங்கள்: பிரவுன் ரைஸ், கினோவா மற்றும் முழு கோதுமை ரொட்டி ஆகியவை நீடித்த ஆற்றலை வழங்குவதோடு, நீண்ட நேரம் உங்களை முழுதாக உணர வைக்கும்.
மெலிந்த புரதம்: மீன், கோழி, பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் அனைத்தும் தசை வெகுஜனத்தை பராமரிக்க புரதத்தின் நல்ல ஆதாரங்கள்.
ஆரோக்கியமான கொழுப்புகள்: இதய ஆரோக்கியத்திற்காக ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் மற்றும் கொட்டைகள் போன்ற மூலங்களிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்க்கவும் .
இந்த உணவுகளை வரம்பிடவும்:

சேர்க்கப்பட்ட சர்க்கரைகள்: சர்க்கரை பானங்கள், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.
உப்பு: அதிகப்படியான சோடியம் உயர் இரத்த அழுத்தத்திற்கு பங்களிக்கும்.
சிவப்பு இறைச்சி: நிறைவுற்ற கொழுப்பைக் குறைக்க சிவப்பு இறைச்சி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
அட்டவணை:

தவறாமல் சாப்பிடுங்கள்: உங்கள் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க நாள் முழுவதும் 3 வேளை உணவு மற்றும் 2-3 சிற்றுண்டிகளை உண்ணுங்கள்.
பகுதி கட்டுப்பாடு: அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க, பகுதி அளவுகளில் கவனம் செலுத்துங்கள்.
நீரேற்றத்துடன் இருங்கள்: நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
ஒரு நிபுணரிடம் ஆலோசனை:
பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர்: ஒரு உணவியல் நிபுணர் உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த மருந்துகள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு தனிப்பட்ட உணவுத் திட்டத்தை உருவாக்க முடியும்.
மருத்துவர்: உங்கள் சுகாதார நிலைமைகளுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதலுக்காக உங்கள் மருத்துவரிடம் உங்கள் உணவுத் தேவைகளைப் பற்றி விவாதிக்கவும்.
உங்களுக்கு உதவக்கூடிய சில ஆதாரங்கள் இங்கே உள்ளன:

வயதான தேசிய நிறுவனம்: ஆரோக்கியமான உணவு திட்டமிடல்: வயதானவர்களுக்கான உதவிக்குறிப்புகள்
நன்றாக சாப்பிடுவது: 7 நாள் உணவுத் திட்டம், ஆரோக்கியமான முதுமைக்கு உள்ளே இருந்து, ஒரு டயட்டீஷியனால் உருவாக்கப்பட்டது