15/12/2024. ( தொடர்-1)
அன்பு சகோதரருக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
1. இறை இல்லங்களில் இறையாட்சி என்கிற இந்த தலைப்பு வேற ஒரு நோக்கத்திற்காக வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.அடுத்து நான் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பகிர்வேன்.
2. நான் யார்? ( Who am I ?) என்ற கேள்விக்காண பதிலை "தன்னை அறிதல்" என்ற இந்த ஞான விளக்க நூலில் தேட முயற்சி செய்தேன். மேற்கண்ட நூலை ஒரு முறை அல்ல பலமுறை படித்து, தொடர்ந்து படித்தும் வருகிறேன். நோக்கம் என்னவென்றால் இதில் கூறப்பட்டுள்ள மையக்கருவை உள்வாங்க வேண்டும். சந்தேகமில்லாமல் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது என் முன்னால் இருக்கும் ஒரே ஒரு கேள்வி அதில் கூறப்பட்ட கருத்தை நூற்றுக்கு நூறு நான் சரியாகப் புரிந்துள்ளேனா? என்பது மட்டுமே.
நான் என்ன புரிந்துள்ளேன் என்பதை தங்களிடம் கூறும் பொழுது, நான் சரியாகப் புரிந்துள்ளேனா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என முழுமையாக நம்புகிறேன்.
3. 'தன்னை அறிதல்' என்ற இந்த புத்தகத்தை முழுமையாக புரிவதற்கு இந்த இரண்டாவது புத்தகம் "தரிக்கத்தின் அவசியம்" ஒரு முன்னுரையை போல எனக்கு தோன்றுவதால் அந்த தரிக்கத்தின் அவசியம் என்ற 40 பக்கம் உள்ள இந்த சிறிய நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை உள்வாங்க ஆசைப்படுகிறேன்.
4. 'தரிக்கத்தின் அவசியம்'! என்ற இந்த சிறிய புத்தகம் ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக கூறுகிறது. அது என்னவென்றால் குர்ஆன்ஷரீபில் மூன்று பிரிவுகள் உள்ளது.
1. ஏவல் விளக்கல்.
2 சரித்திரங்கள்
3. தௌஹீத்
5. முதல் இரண்டு விஷயங்கள் அதாவது ஏவல் விலக்கல் என்பது "சரியத்" எனும் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தெளிவாக பிசகர இமாம்கள் கூறிவிட்டார்கள்.
இரண்டாவது விஷயம் இந்த உலகம் தோன்றியதில் இருந்து நடந்த சரித்திர நிகழ்வுகள் தெளிவாக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது விஷயம் இறைவனை அடைவது. தவ்ஹீத்.
6. இந்த மூன்றாவது விஷயம் இறைவனை அடைவது. தவ்ஹீத். என்பது ஒரு காமிலான முர்ஷிது..( குரு) மூலமாக மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
7. ஆனால், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மற்ற நபிமார்களுக்கும் உள்ள ஒரு முக்கியமான வித்தியாசம் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நபிமார்கள் இறைவனின் தரிசனத்தை தேடினார்கள். ஆனால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "நீங்கள் இறைவனை ஒவ்வொரு வஸ்துவிலும் தேடுங்கள் என்பதாகவும், இறைவனுடைய படைப்புகளை ஆராயுங்கள் அவனுடைய வல்லமை புரியும்"
8. இந்தப் புத்தகத்தில் 12 ம் பக்கத்தில் "ஜனங்கள் எல்லாம் நன்மையைக் கொண்டு இறை நெருக்கத்தை பெற்றால் நீங்கள் "இல்மை' கொண்டு இறை நேருக்கத்தை பெருவீராக" என்ற ஒரு ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.
9. இந்த ஹதீஸ்ன் அடிப்படையில் இந்த புத்தகங்களில் இருக்கக் கூடிய விஷயங்களை உள்வாங்குவதன் மூலமாக இறைவனை அடைய முடியுமா ? என்பதே எனது முயற்சி.
10. நான் தற்போது எங்கு என்ன தொழில் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை
கீழ் கண்ட இணைப்பில் தாங்கள் புரிந்து கொள்ள முடியும்.
இணைப்பு
எனது ரகசிய தோட்டம் :
( My Secret Garden Concept )
என் பெயர் ஹாஜி.S.முஹம்மது,வயது 73.கொடைக்கானல் தாலுகா, பூம்பாரை கிராமமே நான் பிறந்து வளர்ந்த புன்னிய பூமி.
அசையா சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் எனது தொழில். "இயற்கை வைத்தியம்" எனக்கு மிகவும் பிடித்த துறை.இந்திய மாற்று மருத்து கவுன்சிலால் அங்கிகரிக்கபட்ட சிகிச்சையாளர்.( Therapist )
1) எனது ரகசிய தோட்டம் சுமார் 20, 000.ச. அடி பரப்பளவு உள்ள மனையிள் சுமார் ரூ.5,00,000/- முதலீட்டில் உருவாகும்.
( Single beded House 10 Nos., Meditation Cum meeting Hall & Treatment Center and Office Room. )
2) இதில் வனிக நோக்கத்தையும் தான்டி உன்னதமான உறவுகளை கட்டமைக்கும் முயற்சி.
3.) சுதந்திரமானது. தன்னை தானே நிர்வகிக்கும் திரன் படைத்தது.
4.) இறைவனின் படைப்புகள் அனைத்தும் தனிதன்மை வாய்தவை. இந்த திட்டத்தில் என்னுடன் பயனிக்கவிருக்கும் 100.நபர்களும் தனிதன்மை வாய்தவர்கள். சுருங்ககூறின் எனக்கு நல்வழிகாட்டும் ஆசான்கள்.
5. இது ஒரு உள் முக பயனம். தனியாக அல்ல..முகம் தெரிந்த, முகம் தெரியாத ( Social Media friends) 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் இனைந்து மூண்று அடிப்படை கேள்விகளை மையமாக கொண்டு நடத்தவிருக்கும் (:Participatory Action Research ) ஆராய்ச்சி.
~ நான் யார்?
~ என் உடல் எந்த ரகத்தை சார்ந்தது?
~ எப்போது எந்த உணவை சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்? இதுவே ஆராய்ச்சியின் மைய கரு.
எப்படி பங்கேற்பது ? நிபந்தனைகள் :
நாள் ஒன்றிர்க்கு ரூ.10/ வீதம் வருடம் ரூ.3650/- உறுப்பினர் கட்டனம்.
அருகில் இருக்கும் குடில்களில் தங்கி தங்கள் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரித்து தெம்பூட்டுவர்.
பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை அதிகபட்சமாக திட்டம்-1 க்கு ரூ 150/- கிழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மொத்தமாக பணம் செலுத்த அனுமதி இல்லை. தொடர்ந்து 6 வாரங்கள் பணம் செலுத்த தவறிய அங்கத்தினர் தானாகவே வெளியறிவிட்டதாக அர்த்தம்.
மேற்கண்ட நிபந்தனைகளை மனப்பூர்வமாக ஏற்றுகொண்ட 100 நபர்கள் மட்டுமே உறுப்பினர் ஆக முடியும்.
ஹாஜி.S. முஹம்மத். கொடைக்கானல். 9345562420
.
No comments:
Post a Comment