நாள்: 20/09/2026
இன்றைய சிந்தனை: வலிமையான குழுக்களைக் கட்டமைத்தல்
குழு 1 - ANR VS. NATURE CURE Park
நோக்கம்:
இலக்கு உறுதியானது, முன்னேற்றம் தெளிவானது. 2027 ஜனவரி 1 அன்று நாம் எத்தகைய உயர்ந்த நிலையை அடைந்திருப்போம்? அதற்கான துல்லியமான செயல் திட்டம் என்ன? என்பதை இப்போதே நிர்ணயித்துச் செயல்படுவது.
ஹாஜி S. முஹம்மது ஆகிய எனது பங்கு: இந்தச் செயல்பாட்டில் எனது முக்கியப் பொறுப்பு 'ஒருங்கிணைப்பாளர்' (Organizer) ஆகும். ஒரு அனுபவமிக்க மூத்த குடிமகனாகவும், உங்களின் நலன் விரும்பியாகவும் எனது கடமையைச் செவ்வனே செய்யப் போகிறேன். எனது அறிவையும் உழைப்பையும் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதன் மூலமும், உங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலமும் எனது எதிர்கால வாழ்வையும் நான் வளப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
A, N & R ஆகிய மூவருக்கும் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி S. முஹம்மது எழுதும் மடல்: (இந்தத் தபால் நில உடமையாளர்களுக்கு மட்டுமல்ல; குறிப்பாக, ரூபாய் 30 லட்சம் முதலீடு செய்யக்கூடிய முதலீட்டாளர்களையும், அந்த முதலீட்டாளர்களை அடையாளம் காணும் வியாபாரக் கூட்டாளிகளையும் இணைத்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.)
1. உங்களுக்கும் எனக்கும் மத்தியில் இருக்கும் உறவுமுறை:
• முதல் இருவர் (A & N): எனது பெண் மக்கள், பெரியகுளத்தில் வசிக்கிறீர்கள்.
• மூன்றாம் நபர் (R): காலம் சென்ற எனது ஆத்மார்த்த நண்பரின் மனைவி, மதுரையில் வசிக்கிறீர்கள்.( எங்கள் உறவு தந்தை மகள் போன்றது )
2. “பூம்பாறை இயற்கை மருத்துவ பூங்காவில் பண்ணை வீடு” திட்டத்திற்கான நில விவரம்:
• அந்த நிலம் கொடைக்கானல் தாலுகா, பூம்பாறை கிராமம், உயர்நிலைப்பள்ளி எதிரப்புறம் சர்வே எண் 330/10-ல் 62.5 சென்ட் நிலமாகும். இது 1980-ல் எனது குடும்பப் பாகப்பிரிவினை மூலம் காலம் சென்ற எனது தந்தை எனக்கு கொடுத்தது
• 41 ஆண்டுகளுக்குப் பின்னர், 2022-ல் பதிவு செய்யப்பட்ட செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எனது இரண்டு பெண் மக்களுக்கும், என் மகனுக்கும் (ஆர்க்கிடெக் ஷேக் முத்தார்) அந்த நிலத்தைக் கொடுத்தேன்.
• என் மகனுக்கு நான் கொடுத்த16.5 சென்ட் நிலம், உங்களில் மூன்றாம் நபராகிய R- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரையம் பெற்றது..
3. தற்போதைய ANR மூவரின் மனநிலை:
A & N ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தையும், R தான் வாங்கிய 16.5 சென்டில் 10 சென்ட் நிலத்தை மட்டும் விற்று பணமாக்க விரும்புகிறீர்கள்.
4. எனது விரிவான திட்டம் & செயல்முறை:
• மதிப்புக் கூட்டுதல் மற்றும் பண்ணை வீடு திட்டம்: உங்கள் மூவரிடமும், இன்றைய மார்க்கெட் நிலவரப்படி (10 சென்ட் கொண்ட ஒரு பிளாட்டிற்கு தோராயமாக ரூ. 20 லட்சம், +/- 10%) விலை நிர்ணயம் செய்து, மேலே கண்ட 5 பிளாட்டுகளையும் பண்படுத்தி, 10 சென்ட் நிலத்துடன் 400 சதுர அடி சூழலியல் மரபுக் குடில் (Farm House) கட்டித் தருவதாக விளம்பரம் செய்யப்படும்.
• முதலீட்டாளர் ஈர்ப்பு: ரூபாய் 30 லட்சம் முதலீடு செய்யும் நபர்களை அடையாளம் கண்டு, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி, உங்கள் மூவருக்கும் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு, அதில் வரும் உபரி லாபத்தை வைத்து எனது 'இயற்கை மருத்துவ பூங்கா'வை எந்தவிதக் கடனுமின்றி (Zero Debt Model) கட்டமைக்க விரும்புகிறேன்.
• உங்களுடன் பயணம்: எனது இறுதி காலம் வரை உங்களுடன் இணைந்து பயணித்து உங்களை வழிநடத்துவேன்.
5. தற்போதைய எனது பொருளாதார நிலை மற்றும் காலக்கெடு:
• என்னுடைய வங்கிக் கணக்கில் இருப்பு பூஜ்ஜியமாக இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தத் திட்டத்தைத் தொடங்க ஆரம்ப கட்ட முதலீட்டிற்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் தேவைப்படுகிறது. அதை வக்கீல் கடன் (Legal Loan) பெற்று ஆரம்பிக்க இருக்கிறேன்.
• எதிர்வரும் 100 நாட்களுக்குள் உங்களுக்கான பணம் உங்களை வந்தடையும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை. உங்களுக்கு சேர வேண்டிய முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்ட பிறகு, எனது வாடிக்கையாளர்களுக்கு நிலத்தைப் பதிந்து கொடுத்தால் போதும்.
செயல்பாட்டு முறை: நமது செயல்பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட குழுக்களின் ஒருமித்த கருத்துடனும், எனது முழு அங்கீகாரத்துடனும், தெளிவான ஒரு ஒப்பந்தத்தின் (Tripartite Agreement) அடிப்படையிலുமே எதிர்வரும் 100 நாட்களுக்குச் செயல்படுத்தப்படும்.
இந்தத் தபாலில் உள்ள கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் எனக்குத் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு, ஹாஜி S. முஹம்மது ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண்: 9345562420
No comments:
Post a Comment