Popular Posts

Saturday, June 13, 2026

இஸ்லாமிய பார்வையில் நான் யார்? ( பகுதி -1 )

இஸ்லாமிய பார்வையில் நான் யார்? ( பகுதி 1)

(தன்னை அறிதல் மற்றும் தற்சார்பு வாழ்வியல் வழிகாட்டி –)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

1. ஆய்வின் பின்னணியும் எனது சுயசரிதையும் (Background & Context)

நான் 75 ஆண்டுகளைக் கடந்த ஒரு இஸ்லாமியன். எனது வாழ்நாளின் பெரும் பகுதியை உலகியல் சார்ந்த பணிகளில் கழித்திருந்தாலும், மார்க்க ரீதியாக நான் அடைந்த சில முதிர்ச்சியும், சுயபரிசோதனையும் இந்த ஆய்வின் தொடக்கப் புள்ளியாக அமைந்தன.

இறை வேதமான புனித அல்குர்ஆனின் கட்டளைகளின்படியும், அதன் அடிப்படையில் வாழ்ந்து காட்டிய எம்பெருமான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல் மற்றும் செயலை (சுன்னத்) அணு அளவும் பிசகாமல் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதே ஒரு முஃமினின் இலக்கு. ஆனால், கடந்த காலங்களில் நான் அப்படி முழுமையாக வாழவில்லை என்பதுதான் உண்மை. இந்த சுய உணர்தலும், குறைபாடுகளைப் பற்றிய சிந்தனையும்தான் எனது வாழ்வின் பல மன உளைச்சல்களுக்கும், உலகியல் ரீதியான பிரச்சிணைகளுக்கும் மூல காரணம் என்பதை நான் உணர்கிறேன்.

2. எஞ்சிய வாழ்வின் கால மேலாண்மை (24-Hour Time Management)

இந்த பூலோக வாழ்க்கை என்பது நிலையான, நீண்ட நெடிய, முடிவே இல்லாத மறு உலக (ஆகிரத்) வாழ்க்கைக்கான ஒரு சோதனைக்களம் மட்டுமே. இந்த சோதனைக்களத்தில் வெற்றியாளனாக மறு உலகத்தில் பிரவேசிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக எனது தினசரி 24 மணி நேரத்தை பின்வருமாறு பிரகடனப்படுத்தியிருக்கிறேன்:

•              14 மணி நேரம் (மாலை 6:00 மணி முதல் அடுத்த நாள் காலை 8:00 மணி வரை): எனது உடலையும் ஆன்மாவையும் பேணிப் பாதுகாக்கும் ஆன்மீகத் தேடலுக்காகவும், தியானத்திற்காகவும் மட்டுமே செலவிடப்படும்.

•              10 மணி நேரம் (காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை): உலக வாழ்க்கை, குடும்பக் கடமைகள் மற்றும் தற்சார்புக்கான உழைப்பிற்காகச் செலவிடப்படும்.

3. எஞ்சிய வாழ்வின் இரட்டை நோக்கம் (Dual Objectives of Remaining Life)

மறு உலக வாழ்க்கைக்கான உன்னத தேடலை நோக்கிப் பயணிக்கும் வேளையில், எனது எஞ்சிய காலத்தின் இலக்குகள் இரண்டு:

1.     ஆன்மீகப் பாதுகாப்பு: உடலையும் ஆன்மாவையும் தூய்மையாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

1.     தற்சார்பு வாழ்வியல்: எஞ்சிய காலங்களில் சுய தேவைக்காக யாரிடமும் எதையும் எதிர்பார்த்து நிற்காமல், தற்சார்புடன் வாழ்வதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

இந்த இரட்டை இலக்கினை அடைவதற்காக நான் உருவாக்கியுள்ள களம்தான் எனது "இயற்கை வாழ்வியல் பூங்கா (Secret Garden)".

4. தேடலின் முதல் கேள்வி: "நான் யார்?" (The Core Question)

எனது வாழ்வின் கடைசி இருப்பிடமான இந்த இயற்கை வாழ்வியல் பூங்காவில் நான் எழுப்பும் முதல் மற்றும் மிக முக்கிய கேள்வி: "நான் யார்?" என்பதுதான்.

இஸ்லாமியப் பார்வையில் "நான்" என்பது வெறும் தசைநாரால் ஆன உடல் மட்டும்தானா? அல்லது அதற்குள் இருக்கும் ஆன்மாவின் இரகசியம் என்ன? இதற்கான விடையைத் தேடி, தெளிவடைந்து, அதனை வாழ்வில் கடைப்பிடிப்பதே எனது முதல் நோக்கம். அதே சமயம், இத்தூய தேடல் என்னைப்போன்ற பிற மனிதர்களும் தங்களின் வாழ்நாளில் கடைப்பிடிப்பதற்கான ஒரு சிறந்த வழிகாட்டிப் பிரசுரமாகவும் அமைய வேண்டும் என்பதே எனது ஆசை.

5. ஆய்வின் வழிகாட்டி நூல்கள் (Reference Literature)

இந்தக் கேள்விக்கான ஆழமான ஆன்மீக உண்மைகளைக் கண்டறிந்து, முத்துக்களை எடுப்பதற்காகப் பின்வரும் இரு முக்கிய நூல்களை எனது தினசரி வாசிப்பில் (குறைந்தது 10 நிமிடங்கள்) பயன்படுத்தி வருகிறேன்:

•              முன்னுரை நூல்: “தரிக்கத்தின் அவசியம்” (40 பக்கங்கள்) – அகப்பயணத்தின் நுழைவாயில்.

•              முதன்மை நூல்: “தன்னை அறிதல்” (130 பக்கங்கள்) – ஆன்மாவை உணரும் ஆழமான களம்.

6. ஆய்வின் முறைமையியல் (Research Methodology)

இந்த வழிகாட்டிப் பிரசுரம் வெறும் தனி நபர் சிந்தனையாக மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, பின்வரும் அறிவியல் மற்றும் மார்க்கவியல் முறைப்படி இது இறுதி வடிவம் பெறும்: 

 

இந்த இரண்டு புத்தகங்களையும் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் பத்து நிமிஷம் திருப்பிப் பார்க்கிறேன்.

 

2. ஆய்வின் முறை மற்றும் ஆய்வறிக்கையை வெளியிடுதல் :

தலைப்பில் நேரடி தொடர்புள்ள சில கேள்விகளை உற்பத்தி செய்து அதற்கான பதில்களை தொகுத்து முதல் கட்ட ஆவணத்தை தயாரித்து கற்றறிந்த அறிஞர்களிடம் கொடுத்து அவர்களுடைய அபிப்பிராயத்தை எழுத்து மூலமாக வாங்கி அட்டவணை படுத்தி இறுதி ஆய்வு அறிக்கை வெளியிடப்படும்.

 

. ஆய்வுக்கான கேள்விகள்:

 

~ கீழ்க்கண்ட பத்து  வார்த்தைகளின் அந்தரங்க பொருள் என்ன ?

1.     குர்ஆன் ஹதீஸ்

2.     ஈமான் யக்கின்

3.     சரியத் / தரீகத் .

4.     .முர்ஷித், முரீது

5.     ஆன்மா -  ரூஹ்”

6.     .தவ்ஹீத் - ஷிர்க் என்றால் என்ன ?

7.     ஜீன்ஸ்) உடல் (கல்ப்) உள்ளம் , உயிர்விளக்கம் என்ன ?

8.     சைத்தான் விளக்கம் என்ன ? நப்ஸ்  விளக்கம் என்ன ?

9.     தொழுகை  திக்ர்

10.    அல்லாஹ் ரசூல்

 தொடரும்.

 

 

 

No comments:

Post a Comment